Sunday, October 1, 2017

ஜெர்மன் சட்டத்தரணி வருகிறார்.

ஜெர்மன் சட்டத்தரணி வருகிறார்.
ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் வருவாரா?
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம் 213 நாட்களாக நடைபெறுகிறது.
அவர்களை ஜேர்மனியில் இருந்து வந்த வெள்ளை இன சட்டத்தரணி ஒருவர் சந்தித்துள்ளார்.
சர்வதேச விசாரணை மூலம் தமக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என இவ் போராடும் உறவுகள் அச் சட்டத்தரணியிடம் கோரியுள்ளனர்.
ஜேர்மனியில் இருந்து வந்து சட்டத்தரணி ஒருவர் சந்திக்கிறார். ஆனால் கொழும்பில் இருக்கும் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் இதுவரை வந்து சந்திக்கவில்லை.
ஒரு ஜெர்மனி சட்டத்தரணிக்கு இருக்கும் உணர்வுகூட தனக்கு வாக்கு போட்டு பதவியை தந்த மக்கள் மீது சுமந்திரனுக்கு ஏன் இல்லை?
213 நாட்களாக போராடும் இந்த மக்களை சந்தித்து ஒரு ஆறுதல் வார்த்தையாவது சொல்ல வேண்டும் என்று ஏன் இந்த சட்டத்தரணி சுமந்திரனுக்கு தோன்றவில்லை?

No comments:

Post a Comment