Sunday, October 1, 2017

ஜநா வில் வைகோ வை தாக்க முயன்றமை

•ஜநா வில் வைகோ வை தாக்க முயன்றமை
அனைத்து தமிழர்களாலும் வன்மையாக கண்டிக்கப்படல் வேண்டும்!
வைகோ வின் அரசியலில் மாறுபாடு இருக்கலாம்
வைகோ மீது ஆயிரம் விமர்சனம் இருக்கலாம்
ஆனால் ஈழத்தமிழருக்காக குரல் கொடுக்க வந்த வைகோவை
ஜநா மண்டபத்திற்குள்ளேயே 35 சிங்கள அதிகாரிகள் மிரட்டுவதை
எந்தவொரு மானமுள்ள தமிழனும் கைகட்டி வேடிக்கை பார்க்க முடியாது.
தமிழக தலைவர்கள் எல்லாம் கோமாளிகள் என்று ராணுவதளபதி சரத்பொன்சேகா கூறியபோதே தமிழக தலைவர்கள் எல்லாம் ஒன்றுசேர்ந்து நடவடிக்கை எடுத்திருந்தால் இன்று இந்த நிலை வந்திருக்காது.
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை கேவலமாக கார்ட்டுன் போட்டபோதே தமிழக அரசு நடவடிக்கை எடுத்திருந்தால் இன்று இந்த நிலை வந்திருக்காது.
எது செய்தாலும் இந்திய மத்திய அரசு தம்மை ஆதரிக்கும் என்று இலங்கை அரசு நினைப்பதாலேயே இந்த நிலை ஏற்படுகிறது.
தமிழகம் பதிலடி கொடுக்க முனைந்தால் ஒரு இலங்கை அதிகாரிகூட இலங்கையைவிட்டு வெளியேற முடியாது.
அதுமட்டுமன்றி தமிழகத்தில் இருக்கும் ஆயிரக்கணக்கான சிங்களவரின் பாதுகாப்புகூட கேள்விக் குறியாகும் என்பதை இலங்கை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
புலம்பெயர்;நத தமிழர்களின் போராட்டம் இலங்கை அரசுக்கு எரிச்சலைக் கொடுத்துள்ளது.
அதனால்தான் அது தன் கோபத்தை வைகோ மீது காட்டியுள்ளது.
ஆனால் இனி இன்னொருமுறை இப்படி நடக்க இடமளிக்கக்;கூடாது
.எனவே அனைத்து தமிழரும் ஒருமித்து கண்டனம் தெரிவிக்க வேண்டும்.

No comments:

Post a Comment