Sunday, January 22, 2017

• இன்று தோழர் லெனின் அவர்களின் நினைவு தினம் (21.01.2017)

• இன்று தோழர் லெனின் அவர்களின் நினைவு தினம் (21.01.2017)
இன்று தமிழக மக்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர். போராட்டம் இல்லையேல் வாழ்க்கையே இல்லை என்று கூறியவர் தோழர் லெனின்.
நூலகங்களில் உறங்கிக் கிடந்த மாக்சியத்தை நடைமுறைப்படுத்திக் காட்டிய மாபெரும் ஆசான் தோழர் லெனின் அவர்களின் நினைவு தினம் இன்று ஆகும்.
ரஸ்சிய பாட்டாளி வர்க்கத்திற்கு தலைமையேற்று மாபெரும் ரஸ்சிய புரட்சியை வெற்றிபெற வைத்தவர். உலக பாட்டாளி வர்க்கத்திற்கு நம்பிக்கை ஒளி தந்தவர் தோழர் லெனின்
முதலாளி வர்க்க கொடுமைகள் ஒழிய, பாட்டாளி வர்க்கம் ஆட்சியைப் பிடிக்க, ஆயுதப் போராட்டம் மூலமே சாத்தியம் என்பதை நிரூபித்தவர் தோழர் லெனின்
தனி ஒரு நாட்டில் புரட்சி சாத்தியம் இல்லை என்று கூறிய டிரொக்சியின் அகில உலகப் புரட்சியை தத்துவார்த்த ரீதியாகவும, நடைமுறைரீதியாகவும் தோற்கடித்தவர் தோழர் லெனின்.
தேசிய இனப் பிரச்சனைக்கு தீர்வாக சுயநிர்ணய உரிமையை முன்வைத்தவர் தோழர் லெனின். இதன் மூலம் சிறுபான்மை இனங்களின் நம்பிக்கையைப் பெற்றவர் தோழர் லெனின்.
திரிபுவாதிகளை அம்பலப்படுத்தினார். ஏகாதிபத்தியத்திற்கு எதிராக உலகப் பாட்டாளி வர்க்கத்தின் ஜக்கியத்தை ஏற்படுத்தியவர் தோழர் லெனின்.
• மாக்சிய லெனிச மாவோசிச சிந்தனையில்
புதிய ஜனநாயகப் புரட்சியை முன்னெடுப்போம்!
• பாராளுமன்ற பாதையை நிராகரித்து ஆயுதம் ஏந்திய
மக்கள் யுத்தப் பாதையை முன்னெடுப்போம்.!
• போலிகளை அம்பலப் படுத்துவோம்.
புரட்சிவாதிகள் ஜக்கியப் படுவோம்!

No comments:

Post a Comment