•ஆட்டிசம்: ஒரு பன்முகப் பார்வை
ஆட்டிசம் ஒரு மனநோய் அல்ல. ஆட்டிசம் என்பது ஒரு வளர்ச்சிக் குறைபாடு. ஆட்டிசமும் அறிவாற்றல் குறைபாடும் ஒன்றல்ல.
அண்மை காலமாகப் பொது மக்கள் கவனத்தை ஈர்த்து வரும் ஒரு குறைபாடு ஆட்டிசம் ஆகும்.
நாளேடுகளிலும் வலைத்தளங்களிலும் ஆட்டிசம் இப்போது ஒரு பேசுபொருளாக இடம் பெற்று வருகிகிறது.
ஆட்டிச பாதிப்பு உள்ளவர்கள் பற்றி சில திரைப்படங்களும் சமீப காலமாக வெளிவந்து மக்கள் மத்தியில் இது குறித்து விழிப்புணர்வு எற்பட வழிவகுத்துள்ளன.
இவை வரவேற்கப்பட வேண்டிய முன்னேற்றங்களே என்றபோதிலும் ஆட்டிசம் பற்றி பொது வெளியில் உள்ள பல தகவல்கள் குழப்ப மூட்டுவதாக உள்ளன,
சில வேளைகளில் தவறான ஒரு பிம்பத்தை ஏற்படுத்துவதாகவும் உள்ளன.
ஆட்டிசத்தைப் புரிந்து கொள்வது கடினமானது. ஏனென்றால் அதன் வெளிப்பாடுகளும் அறிகுறிகளும் பல வகைப்பட்டவை.
ஆட்டிசம் என்பது ஒரு குறைபாடு அல்ல. உண்மையில் ஆட்டிசம் என்று ஒருமையில் பேசுவது தவறு.
ஆட்டிசம் என்ற பெயர் குழந்தைகளில் மனவளர்ச்சியில் ஏற்படும் பத்துக்கு மேற்பட்ட பாதிப்புகளில் காணப்படும் பொதுவான அறிகுறிகளை உள்ளடகியது.
ஆட்டிசத்தை அடையாளம் காணுவதில் சங்கடமும் உண்டு. ஆட்டிசத்தை கண்டறிய எந்த ஒரு புறநிலையான பரிசோதனையும் இல்லை.
மாரடைப்பு நோயை ஈ.சி.ஜி. போன்ற பரிசோதைகள் வழியாக உறுதிப் படுத்திக்கொள்ள முடியும். ஆனால் ஆட்டிசத்துக்கு என்று எந்த சோதனையும் கிடையாது. ஆட்டிசம் அதன் அறிகுறிகளைக் கொண்டே அடையாளம் காணப்படுகிறது.
ஆட்டிசம் குறித்து தமிழ் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக உளவியல் மருத்துவர் தம்பிராசா நூல் ஒன்றை எழுதியுள்ளார்.
அந்த நூல் தமிழ் மக்கள் அனைவருக்கும் இலவசமாக சென்றடைய வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் அதனை தனது புளக்கில் வெளியிட்டு வருகின்றார்.
ஆட்டிசம் குறித்து அறிய விரும்புவோர் கீழ்வரும் அவரது புளக்கில் வாசிக்கலாம்.
இங்கிலாந்தில் பேர்மிங்காம் நகரில் வாழ்ந்துவரும் உளவியல் மருத்துவரான தம்பிராசா அவர்கள் மனநோய்களும் மனக் கோளாறுகளும் என்னும் தமிழ் நூலையும் எழுதியுள்ளார். அது காலச்சுவடு வெளியீடாக வெளிவந்துள்ளது.
மேலும் அவர் ஆங்கிலத்தில் உளவியல் சம்பந்தமாக 7 நூல்கள் எழுதியுள்ளார். அவை பல்கலைக்கழகங்களில் பாடப்புத்தகமாக பயனபட்டு வருகின்றன.
எனது “சிறப்புமுகாம் என்னும் சித்திரவதை முகாம்” மற்றும் “இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு” நூல்களையும் மருத்துவர் தம்பிராசா அவர்களே ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பு செய்துள்ளார்.
மக்கள் மீதான அவருடைய உணர்வுகளை பாராட்டுவதோடு அவருக்கு எனது வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
No comments:
Post a Comment