•மக்களே, மக்கள் மட்டுமே உலக வரலாற்றை ஆக்குவதிலான இயக்க சக்தியாவர்.- மாசே துங்
மக்களே மகத்தான சக்தி. மக்கள் சக்தி அணு குண்டைவிட வலிமையானது. மக்களே வரலாற்றை படைக்கும் இயக்க சக்தி என்றார் தோழர் மாசே துங்.
அம். அது உண்மைதான் என்பதை தமிழக மக்கள் மூலம் வரலாறு மீண்டும் ஒரு முறை நிரூபித்துக்கொண்டிருக்கிறது.
மக்கள் அமைதியாக போராடிய போது பொலிசாரை ஏவி தடியடி நடத்தினார்கள். வழக்கு நிலுவையில் இருப்பதால் சட்டம் இயற்ற முடியாது என்று திமிராக சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
ஆயிரம் ஆயிரமாக மக்கள் போராட்டத்தில் குதித்தார்கள். தமிழகம் எங்கும் மட்டுமல்ல உலகெங்கும் தமிழர்கள் மத்தியில் போராட்டம் விரிந்தது.
போராடும் மக்கள் ஒரு புறம் ஓடும் ரயிலை மறித்தார்கள். அடுத்து விமானத்தை மறிக்கப் போவதாக கூறினார்கள்.
மறுபுறம் போராட்டம் தபால் மறியல், வரி கொடாமை என்று விரியப் போகிறது என்பதை அரசு தனது உளவுப்படை மூலம் அறிந்து கொண்டது.
ஆண்டுதோறும் தமிழ்நாட்டில் இருந்து தான் பெற்றுக்கொள்ளும் 85 ஆயிரம் கோடி ரூபாவுக்கு ஆப்பு விழப்போகிறது என்பதை மோடி அரசு உணர்ந்து கொண்டது.
அதுமட்டுமல்ல வரும் 26ம் திகதி குடியரசு தினம் பகிஸ்கரிக்கப்படும் என்று போராட்டக்காரர்கள் அறிவித்ததும் மோடிக்கு நிச்சயம் வயிற்றைக் கலக்கியிருக்கும் செய்திதான்.
அதேவேளை தமிழக எம.பி கள் மற்றும் எம்.எல்.ஏ க்கள் அனைவரும் பதவி விலக வேண்டும் என்றும் இல்லையேல் முதல்வர் பன்னீரை முற்றுகை செய்வோம் என்றும் போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளார்கள்.
தனக்கு பதவிக்கு அபத்து என்றவுடன் நள்ளிரவிலும் பேச்சுவார்த்தைக்கு ஓடி வந்தார் முதல்வர் பன்னீர். அதுமட்டுமல்ல இரவோடு இரவாக டில்லிக்கும் பறந்து சென்றார்.
இனியும் அமைதி காத்தால் தமது பதவிக்கு மட்டுமல்ல இந்தியாவுக்கே அபத்தாகிவிடும் என்பதால் மோடியும் பன்னீரும் அவசர சட்ட மூலம் தயாரிக்கின்றனர்.
அதுமட்டுமல்ல எந்த ஏகாதிபத்திய கம்பனிகள் ஜல்லிக்கட்டிற்கு தடை வாங்க பின்னனியில் இருந்தனவோ அவையும் இன்று பிச்சை வேண்டாம் நாயைப் பிடி என்ற கதையில் இருக்கின்றனர்.
இனி 26 ம் திகதி முதல் தமிழகத்தில் பெப்சி கோக் குளிர்பாணங்கள் விற்பனை செய்யப்படாது என்று வர்த்தக சங்கதலைவர் வெள்ளையன் அறிவித்துள்ளார்.
இப்படி ஒரு அடி விழும் என்று ஏகாதிபத்திய கம்பனிகள் நிச்சயம் எதிர் பாhத்திருக்க மாட்டார்கள். போராட்டம் இன்னும் தொடர அனுமதித்தால் தமிழகத்தில் இருக்கும் அனைத்து வெளிநாட்டு கம்பனிகளுக்கும் அபத்து வரும் என்பதை அவை இனம் கண்டு கொண்டுள்ளன.
எனவே பன்னீர் மோடி மட்டுமல்ல வெளிநாட்டு கம்பனிகளும் சேர்ந்து அவசர சட்டம் கொண்டு வந்து போராட்டத்தை நிறுத்த முயல்கின்றன.
ஆம். தமிழக மக்கள் சாதித்து விட்டார்கள். வெறும் நான்கு நாள் போராட்டதிலேயே மத்திய மாநில அரசுகளை மண்டியிட வைத்துவிட்டார்கள்.
வரலாற்றில் தமிழக மக்களின் போராட்டம் பெருமைக்குரிய இடத்தைப் பிடித்துவிட்டது.
No comments:
Post a Comment