Wednesday, January 11, 2017

•தமிழக கியூ பிராஞ் பொலிசின் அராஜகத்தை கண்டிப்போம்!

•தமிழக கியூ பிராஞ் பொலிசின் அராஜகத்தை கண்டிப்போம்!
தமிழக வழக்கறிஞர் அஜீதாவை மாவோயிஸ்ட்டு என்று கேரள பொலிஸ் போலி மோதலில் சுட்டுக் கொன்றது.
தமிழக வழக்கறிஞர் முருகன் அவர்களை தமிழக கியூ பிராஞ் பொலிஸ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.
முருகன் ஒரு வழக்கறிஞர். அவர் மனித உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் CPCL அமைப்பின் பொறுப்பாளர்.
தமிழ்நாட்டில் மாவோயிஸ்ட்டு என்று கைது செய்து சிறையில் அடைக்கப்படுவர்களுக்கு நீதியை பெற்றுக் கொடுக்கும் வழக்கறிஞராக முருகன் செயற்பட்டு வந்துள்ளார்.
மாவோயிஸ்டு கட்சியின் முக்கிய தலைவராக கருதப்படும் தோழர் விவேக் என்பவர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவருடைய வழக்கு விசாரணை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. வரும் 11.01.17 யன்று வழக்கறிஞர் முருகன் இவ் வழக்கில் முக்கிய வாதம் செய்யவிருந்தார்.
இந்நிலையில் முருகன் வேண்டுமென்றே கியூ பிராஞ் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் பிணையில் வரமுடியாத UAPA என்னும் கொடிய சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டுள்ளார்.
கரூரில் கைது செய்யப்பட்ட கலா , சந்திரா ஆகியோர் மீதான வழக்கிலும் முருகன் வழக்கறிஞராக ஆஜராகி வருகிறார். தற்போது அவ் வழக்கிலேதான் முருகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
வழக்கறிஞர் முருகன் கைது என்பது தோழர் விவேக்கிற்கான நீதியை மறுப்பதுடன் இனி மாவோயிஸ்ட்டுகளுக்காக எந்த வழக்கறிஞரும் ஆஜராவதையும் தடுக்கிறது.
கியூ பிராஞ் பொலிஸ் நினைத்தால் யாரையும் மாவோயிஸ்ட்டு என்று கைது செய்ய முடியும். அவர்களை பிணையில் வரமுடியாத சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க முடியும். அவர்களுக்கு யாராவது வழக்கறிஞர் உதவ முன்வந்தால் அவர்களையும் கைது செய்து சிறையில் அடைக்க முடியும்.
கியூ பிராஞ் பொலிசாரின் இந்த அராஜகத்தை அனைவரும் கண்டிக்க வேண்டும்.

No comments:

Post a Comment