Wednesday, January 11, 2017

•மைத்திரியின் "நல்லாட்சி அரசு" சாதித்தது என்ன?

•மைத்திரியின் "நல்லாட்சி அரசு" சாதித்தது என்ன?
ஜனாதிபதி மைத்திரி பதவி ஏற்று நேற்றுடன் 2 வருடங்கள் முடிவடைந்துள்ளன. கடந்த 2 வருடத்தில் அவர் சாதித்தது என்ன?
தமிழ் மக்களின் வாக்கில் பதவியைப் பெற்ற மைத்திரி, தமிழ் மக்களுக்கு இதவரை செய்தது என்ன?
சம்பந்தர் அய்யாவுக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி கிடைத்தது
செல்வம் அடைக்கலநாதனுக்கு குழு தலைவர் பதவி கிடைத்தது
சுமந்திரனுக்கு ரணில் மூலம் கோடிக்கணக்கான ரூபா பணம் கிடைத்தது
கூட்டமைப்பு எம்.பி மார்களுக்கு 5 கோடி ரூபா சொகுசு வாகனம் கிடைத்தது
இதுதவிர அவ்வப்போது வெளிநாட்டு சுற்றுலா வாயப்புகள் வேறு கிடைத்தது
ஆனால் தமிழ் மக்களுக்கு என்ன கிடைத்தது?
அரசியல் கைதிகள் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை
காணாமல் போனோர் இன்னும் கண்டு பிடிக்கப்படவில்லை
இடம் பெயர்ந்தோர் இன்னும் மீள் குடியேற்றம் செய்யப்படவில்லை
மக்களின் காணிகளில் இருந்து ராணுவம் வெளியேற்றப்படவில்லை
இதுவரை இவைகள் ஏன் செய்யப்படவில்லை என்பது பற்றி ஜனாதிபதி மைத்திரி எதுவும் கூறவில்லை
இனி எப்போது இவைகள் செய்யப்படும் என்பது குறித்தும் ஜனாதிபதி மைத்திரி எதுவும் கூறவில்லை.
கடந்த வருடம் தீர்வு கிடைக்கும் என்று சம்பந்தர் அய்யா கூறினார். அப்போதும் மைத்திரி இது குறித்து எதுவும் கூறவில்லை.
இந்த வருடம் தீர்வு கிடைக்கும் என்று சம்பந்தர் அய்யா இப்போது கூறுகின்றார். இப்போதும் மைத்திரி இது குறித்து எதுவும் கூறவில்லை.
மைத்திரியின் நல்லாட்சி அரசு தமிழ் மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை.
மொத்தத்தில் தமிழ் மக்கள் மீண்டும் ஒரு முறை ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள்.

No comments:

Post a Comment