Sunday, January 22, 2017

•போராட்டம் இந்திய அரசுக்கு மட்டுமல்ல இலங்கை அரசுக்கும் ஒரு செய்தியை சொல்லியுள்ளது!

•போராட்டம் இந்திய அரசுக்கு மட்டுமல்ல
இலங்கை அரசுக்கும் ஒரு செய்தியை சொல்லியுள்ளது!
போராட்டம், அதியம் ஆச்சரியம் மட்டுமல்ல
அது மிக்க மகிழ்வையும் கொடுக்கிறது.
போராட்டம், சாதி கடந்து மதம் கடந்து தமிழர்களை
தமிழகத்தில் மக்களை ஒன்றாக்கியது.
போராட்டம், தமிழகத்தில் மட்டுமல்ல உலகத்தில் உள்ள
தமிழ் மக்களையெல்லாம் உணர்வு கொள்ள வைத்துள்ளது.
இலங்கையில் நல்லூரில், வவுனியாவில், மட்டக்கிளப்பில், திருகோணமலையில்
கொழும்பல் என பல இடங்களில் ஆதரவுக் குரல் எழுந்துள்ளது.
லண்டனில் முதலில் இந்திய தூதரகத்திற்கு முன்னால் ஆதரவு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பின்னர் வெம்பிளியில் நடைபெற்றது. இன்று ஈஸ்ட்காம் நகரில் நடைபெற்றுள்ளது.
லண்டனில் இருக்கும் ஈழத் தமிழர், இந்திய தமிழர், மலேசிய தமிழர், சிங்கப்பூர் தமிழர் எல்லாம் ஒன்று சேர்ந்து குரல் கொடுத்துள்ளனர்.
இதுவரை இப்படியொரு ஒன்றுபட்ட தமிழர் குரல் லண்டனில் ஒலிக்கவில்லை. ஆனால் தமிழக மக்களின் போராட்டம் இன்று இதனை சாதித்துள்ளது.
உலகில் எங்கெல்லாம் தமிழன் வாழ்கிறானொ அங்கெல்லாம் ஒன்று திரண்டு குரல் கொடுக்கிறான். தன்னை அடையாளப்படுத்துகிறான்.
இனி எங்கு ஒரு தமிழன் பாதிக்கப்ட்டாலும் தமிழன் ஒன்று திரண்டு குரல் கொடுக்க தயங்கமாட்டான் என்பது காட்டப்பட்டுள்ளது.
இனி தமிழன் ஒன்றுபட்டு போராட தயங்க மாட்டான் என்ற செய்தி இந்திய அரசுக்கு மட்டுமல்ல இலங்கை அரசுக்கும் தெரிவித்துள்ளது இந்த போராட்டம்.
போராட்டம் மகிழ்சிகரமானது என்றார் கால் மாக்ஸ் ஆம். உண்மைதான் இதனை இன்று ஈஸ்ட்காமில் ஒன்று திரண்ட தமிழர்கள் காட்டியுள்ளனர்.
தொடரட்டும் போராட்டம்!
வெல்லட்டும் மக்கள் போராட்டம்!

No comments:

Post a Comment