Sunday, January 22, 2017

இதுதான் இந்திய நியாயம்!

இதுதான் இந்திய நியாயம்!
தமிழ்நாட்டில் இதுவரை நூற்றுக்கு மேற்பட்ட விவசாயிகள் வறுமையின் கொடுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்துள்ளார்கள்.
ஆனால் மோடி யின் இந்திய அரசு கர்நாடகாவை வறட்சி மாநிலமாக அறிவித்து 1200 கோடி ரூபா நிதி உதவி அளித்துள்ளது.
அதுமட்டுமன்றி கென்யா நாட்டு விவசாய வளர்சிக்காக 683 கோடி ரூபாவை இந்திய அரசு வழங்கியுள்ளது.
கென்யா நாட்டு விவசாயிகள் மீது காட்டும் அக்கறையைக்கூட தமிழ்நாட்டு விவசாயிகள் மீது காட்ட இந்திய அரசு விரும்பவில்லை.
தமிழ்நாட்டில் இருந்து வருடந்தோறும் 85ஆயிரம் கோடி ரூபாவை பெற்றுக்கொள்ளும் இந்திய அரசு தமிழ் நாட்டிற்கு உதவ மறுக்கிறது.
மாறாக ஒருபுறம் தமிழக விவசாயி செத்துக் கொண்டிருக்க தமிழகத்திடமிருந்து பெற்றுக்கொண்ட பணத்தை மறுபுறம் கர்நாடகாவிற்கும் , கென்யாவிற்கும் அது வழங்குகிறது.
தமிழனுக்கு ஒரு நியாயம். மற்றவர்களுக்கு இன்னொரு நியாயம். இதுதான் இந்திய நியாயம்.
இது என்ன நியாயம் என்று கேட்டால் எம்மை பிரிவினைவாதிகள் என்கிறார்கள்!

No comments:

Post a Comment