Wednesday, January 11, 2017

•இந்திய அரசின் தொடரும் தமிழ் இன விரோத போக்கு!

•இந்திய அரசின் தொடரும் தமிழ் இன விரோத போக்கு!
கனடாவில் 3 லட்சம் தமிழர்களே உள்ளனர். ஆனால் அங்கு தமிழ் மரபு மாதம் கொண்டாடப்படுகிறது.
அமெரிக்காவில் 1 லட்சம் தமிழர்களே உள்ளனர். ஆனால் அங்கு பொங்கல் திருநாள் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 7 கோடி தமிழர்கள் உள்ளனர். ஆனால் அங்கு கட்டாய விடுமுறைப் பட்டியலில் இருந்து பொங்கல் திருநாள் நீக்கப்பட்டுள்ளது.
பொங்கல் திருநாளில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று தமிழ் மக்கள் இந்திய அரசிடம் கோரி வருகின்றனர்.
ஆனால் இந்திய அரசோ ஜல்லிக்கட்டை மட்டுமல்ல பொங்கலையும் தமிழர்கள் கொண்டாடுவதை தடுக்க முனைகிறது.
தமிழ் மக்கள் பொங்கல் திருநாளை தமிழ் புத்தாண்டின் திருநாளாக கொண்டாடுவதை இந்திய அரசு விரும்பவில்லை.
அண்டிப் பிழைக்க வந்த ஆரிய கூட்டம் புகுத்திய அறிவுக்கு ஒவ்வாத அறுபது ஆண்டுகளை சித்திரை புத்தாண்டாக திணிக்க இந்திய அரசு முனைகிறது.
மதுரை கீழடியில் கிடைக்கப்பெற்ற 2500 வருடங்களுக்கு முந்திய 5000 தொல் பொருட்கள் தமிழனின் பெருமையை பறைசாற்றுவதால் அந்த அகழ்வாராய்சியையே இந்திய அரசு மூடி மறைக்க முனைகிறது.
ஜல்லிக்கட்டு ஏகாதிபத்திய எதிர்ப்பைக் கொண்டிருப்பதால் அதனை அடக்க இந்திய அரசு துடிக்கிறது.
காங்கிரஸ், பிஜேபி யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழ் மக்கள் மீதான இந்திய அரசின் விரோதம் தொடர்கிறது.
இந்திய அரசு தமிழ் மக்களை இந்தியர்களாக கருதவில்லை. மாறாக அடிமைகளாகவே வைத்திருக்க விரும்புகிறது.

No comments:

Post a Comment