Tuesday, January 31, 2017

•இனி என்ன சொல்லப் போகிறார்கள்?

•இனி என்ன சொல்லப் போகிறார்கள்?
கத்தி எடுத்தவன் கத்தியால் சாவான். துப்பாக்கி ஏந்தியவன் துப்பாக்கியால் சாவான் என்கிறார்கள்.
அப்ப, மகாத்மா காந்தி துப்பாக்கியால் செத்தாரே.. அவர் என்ன துப்பாக்கி தூக்கியவரா? இல்லையே. இதற்கு என்ன பதில் தரப்போகிறார்கள்?
சரி, இப்ப நாங்கள் விடயத்திற்கு வருவோம். “ஆயுதம் போராட்டம் அழிவை தரும். அது ஒருபோதும் வெற்றியை தராது” என்றும் எனவே “அகிம்சை வழியில் போராடி விடுதலை பெறுவோம்” என்று சிலர் கூறுகின்றனர்.
முக்கியமாக சம்பந்தர் அய்யா, ஆயுதப் போராட்டத்தை தான் ஒருபோதும் ஆதரிக்கவில்லை என்று கூறினார்.
மீண்டும் அகிம்சைப் போராட்டம் வெடிக்கும் என்று மாவை சேனாதிராசா கூறுகின்றார்.
30 வருட ஆயுதப் போராட்டத்தில் சாதித்தது என்னவென்று சுமந்திரன் கேட்கிறார்.
மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டம் வேண்டாம் என்று தமிழினி எழுதிய புத்தகம் பல பதிப்புகள் வெளியிடுகிறார்கள்.
இவர்கள் எல்லோரும் ஆயுதப் போராட்டம் வேண்டாம். அகிம்சைப் போராட்டத்தின் மூலம் தமிழ் மக்கள் விடுதலை பெறலாம் என்கிறார்கள்.
இலங்கையில் முதலில் அகிம்சைப் போராட்டமே நடைபெற்றது. அது இலங்கை அரசால் வன்முறை மூலம் நசுக்கப்பட்ட பின்பே இளைஞர்கள் ஆயுதம் தூக்கினார்கள்.
இந்த உண்மையை மறைத்து மீண்டும் அகிம்சைப் போராட்டம் மூலம் தீர்வு பெறலாம் என இவர்கள் மக்களை ஏமாற்றுகின்றனர்.
அகிம்சை வழியில் போராடிய தமிழக மாணவர்களை பொலிஸ் வன்முறையை பாவித்து அடக்கியுள்ளது.
உலகில் உள்ள தமிழ் மக்கள் எல்லாம் ஒன்று திரண்டு அகிம்சை வழியில் போராடிய போராட்டதை ஈவு இரக்கமின்றி இந்திய அரசு அடக்கியுள்ளது.
கமராவில் படம் பிடிக்கப்படுகிறது என்று தெரிந்தும்கூட கொஞ்சம்கூட பயம் இன்றி பொலிஸ் காட்டுமிராண்டித்தனமாக மக்களை தாக்குகிறது என்றால் அதன் அர்த்தம் என்ன?
அமைதியாக போராடும் மாணவர்களை கலைக்கக்கூடாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தும் நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் பொலிஸ் நடநது கொண்டது எதைக் காட்டுகிறது?
காந்தி பிறந்த தேசத்திலேயே காந்தியின் அகிம்சைப் போராட்டத்தை மதிக்கவில்லை என்றால் இலங்கையில் சிங்கள அரசு அகிம்சைப் போராட்டத்தை மதிக்குமா?
அகிம்சைப் போராட்டம் பயன் தராது என்பதை இனியாவது இவர்கள் ஒத்துக்கொள்வார்களா?

No comments:

Post a Comment