Sunday, January 22, 2017

தை பிறந்தால் வழி பிறக்குமா? உழவர் வாழ்வு சிறக்குமா?

•தை பிறந்தால் வழி பிறக்குமா?
உழவர் வாழ்வு சிறக்குமா?
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள்.
ஒவ்வொரு வருடமும் தை பிறக்கிறது
ஆனால் உழவர் வாழ்வில் வழி பிறக்கவில்லை
கடந்த மாதம் மட்டும் தமிழகத்தில் இறந்த விவசாயிகள் எண்ணிக்கை 100 க்கும் மேல்.
தமிழகத்தில் மட்டுமல்ல இலங்கையிலும் வறுமையின் கொடுமை தாங்க முடியாமல் மக்கள் தற்கொலை செய்கின்றனர்.
உலகத்திற்கே உணவு வழங்கும் உழவர் தமக்கு உணவு இன்றி தற்கொலை செய்யும் அவல நிலை.
சிலர் வேறு வழியின்றி எலிக் கறி தின்னும் நிலைக்கு சென்றுவிட்டனர்.
ஆனால் அவர்கள் மீது அக்கறை கொள்ள அரசுகள் விரும்பவில்லை.
அரசுகளின் விருப்பமெல்லாம் ஏகாதிபத்திய கம்பனி முதலாளிகளின் நலனை காப்பதாகும்.
முதலாளிகளின் கடனை தள்ளுபடி செய்து உதவி செய்யும் அரசுகள் விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய மறுக்கின்றன.
கடந்தவாரம்கூட ஒரு பெண் கிளிநொச்சியில் கடன் சுமை தாங்கமுடியாமல் தற்கொலை செய்துள்ளார்.
வறட்சியினால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு உரிய நிவாரணமோ அல்லது எந்தவித உதவியோ வழங்க அரசுகள் முன்வரவில்லை.
ஒட்டுமொத்தத்தில் விவசாயிகள் வாழ்வு பெரும் கேள்விக் குறியாக உள்ளது.
விவசாயிகள் ஒன்று திரண்டு போராடாதவரையில் அவர்கள் வாழ்வு மலர வழியில்லை.

No comments:

Post a Comment