•ரவிராஜ் குடும்பத்திற்கு முதுகில் குத்திய சுமந்திரனும் சம்பந்தரும்!
ரவிராஜ் கொலை வழக்கு தீர்ப்பு தமது முதுகில் குத்தப்பட்டதாக உணர்கிறோம் என்று அவரது மனைவியும் மகளும் தெரிவித்திருந்தனர்.
ரவிராஜ் கொலை வழக்கு தீர்;ப்புக்கு எதிராக மேனமுறையீடு செய்து நிச்சயம் நீதியைப் பெறுவோம் என்று அப்போது சுமந்திரன் கூறினார்.
அவர் செய்த மேன் முறையீட்டில் அவர் ஆஜராகாததால் நீதிமன்றம் அதனை தள்ளுபடி செய்துள்ளது.
அதுமட்டுமன்றி யூரிமார் நியமித்தபோதே ஏன் அதற்கு எதிராக முறையிடவில்லை என்றும் நீதிமன்றம் கேட்டுள்ளது.
உண்மையில் இந்த யூரிமார் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்போது ஆஜராகியிருந்த வழக்கறிஞர் வழக்கில் இருந்து விலகினார்.
அத்துடன் சம்பந்தர் அய்யாவிடம் இதனைக்கூறி பாராளுமன்றத்தில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும்படியும் அவர் கேட்டிருந்தார்.
சம்பந்தர் அய்யா வேண்டுமென்றே இதைக் கவனத்தில் எடுக்காமல் விட்டார். அதேபோன்று சமந்திரனும் வேண்டுமென்றே வழக்கை தோல்வியடைய செய்துள்ளார்.
உண்மையில் ரவிராஜ் குடும்பத்திற்கு முதுகில் குத்தியது இன்றைய இலங்கை அரசு அல்ல. மாறாக சம்பந்தரும் சுமந்திரனுமே முதுகில் குத்தியுள்ளார்கள்.
இங்கு எமது வருத்தம் என்னவெனில் தமது பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் கொலைக்கே நீதியைப் பெற்று தராத சம்பந்தரும் சுமந்திரனும் ஆயிரக் கணக்கில் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு நீதியை பெற்று தருவார்கள் என்று இன்னமும் சிலர் நம்புகிறார்களே?
No comments:
Post a Comment