Tuesday, January 31, 2017

•மக்கள் மீது வன்முறை திணிக்கப்பட்டால் அதே வன்முறையால் மக்கள் பதில் அளிப்பர்!

•மக்கள் மீது வன்முறை திணிக்கப்பட்டால்
அதே வன்முறையால் மக்கள் பதில் அளிப்பர்!
அமைதி வழியில் மக்கள் போராடும்போது அவர்கள் மீது வன்முறை பிரயோகிக்கப்பட்டால் மக்கள் அதே வன்முறையை கையில் எடுப்பர்.
மக்கள் என்ன வழியில் போராட வேண்டும் என்பதை மக்கள் தீர்மானிப்பதில்லை. மாறாக மக்களை அடக்கும் அரசே தீர்மானிக்கின்றது.
இதுதான் இன்று இலங்கையில் நடந்து. இதுதான் இன்று தமிழகத்தில் நடக்கின்றது. இதுதான் உலகெங்கும் நடக்கிறது.
அகிம்சை வழியில் போராடிய தமிழ் மக்கள் மீது இலங்கை அரசு வன்முறையை பிரயோகித்தமையினால்தான் தமிழ் இளைஞர்கள் வேறு வழியின்றி வன்முறையை தேர்ந்தெடுத்தனர்.
இதையேதான் டெலோ தலைவர் தங்கத்துரை இலஙகை நீதிமன்றத்தில் கூறினார்” நாம் வன்முறை மீது காதல் கொண்ட மனநோயாளிகள் இல்லை “ என்று
அதுமட்டுமல்ல இன்று அனையிறவில் ராணுவம் செய்யும் வன்முறை நாளை அம்பாந்தோடடையிலும் நடக்கும் என்று சுட்டிக்காட்டினார்.
அதேபோல் காஸ்மீரில் பொலிஸ் என்ன செய்கிறதோ, சதீஸ்கரில் பழங்குடி மக்களுக்கு பொலிஸ் என்ன செய்கிறதோ அதையேதான் தமிழகத்திலும் பொலிஸ் செய்ய முனைகிறது.
இன்று தானே கொழுத்திவிட்டு மாணவர்களை கலகக்காரர்கள் என்று கூறும் பொலிஸ், நாளை அவர்களை சுட்டுக் கொன்று விட்டு பயங்கரவாதிகள் என்றும் கூறும்.
வன்முறையைக் காட்டி மக்களை அடக்கிவிட முடியாது. மக்கள் மீது வன்முறை ஏவப்பட்டால் அதே வன்முறை மூலம் மக்கள் தக்க பதில் அளிப்பார்கள்.

No comments:

Post a Comment