Sunday, January 22, 2017

•ஜல்லிக்கட்டு இருக்கும்வரை இவர்கள் பெயரும் இருக்கும்!

•ஜல்லிக்கட்டு இருக்கும்வரை
இவர்கள் பெயரும் இருக்கும்!
ஜல்லிக்கட்டிற்கான தமிழக மக்களின் போராட்டம் வெற்றி பெற்றுள்ளது என செய்திகள் வருகின்றன.
ஆனால் இந்த வெற்றி செய்திக்காக உழைத்த இருவர் இதனை கேட்பதற்கு இன்று எம்மிடையே இல்லை.
ஒருவர் சேலத்தில் ரயிலை மறித்தபோது மின்சாரம் தாக்கியதில் இறந்த லோகேஸ் என்ற 17 வயது மாணவன்.
அவன் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டும் சிகிச்சை பலன் இன்றி இறந்து விட்ட செய்தி எமக்கு மிகுந்த வருத்தத்தைக் கொடுத்தது.
அடுத்தவர் ஈழத்தில் கிளிநொச்சியில் நடந்த ஜல்லிக்கட்டுக்கான ஆதரவு போராட்டத்தில் கலந்துகொண்டு விட்டு திரும்பிச் செல்லும்போது மரணமடைந்த முரளிதரன்.
24 வயது கொண்ட முரளிதரன் யாழ் பல்கலைக்கழக பட்டதாரி. சிறந்த தமிழ் உணர்வாளர். தமிழ் இன போராட்டங்களில் தவறாமல் கலந்து கொள்பவர்.
கிளிநொச்சியில் நடந்த ஜல்லிக்கட்டுக்கான போராட்டத்தில் கலந்துவிட்டு வீடு திரும்பிச் செல்லும்போது ஏற்பட்ட விபத்தில் முரளிதரன் மரணமடைந்துள்ளார்.
நடந்து முடிந்த யுத்தத்தில் தனது கணவனையும் இன்னொரு பிள்ளையையும் பறி கொடுத்த தாயார் தற்போது தன் மகன் முரளிதரனையும் பறிகொடுத்துவிட்டு அனாதராவாக நிற்கிறார்.
அந்த தாயாருக்கு என்ன ஆறுதல் வார்த்தை சொல்வது என்றே தெரியவில்லை. வெறுமனே அஞ்சலி செலுத்திவிட்டு கடந்து போகவும் முடியவில்லை.
இந்த இரு இளைஞர்களின் இழப்பிற்கும் இந்திய அரசே பொறுப்பாகும். இன்று இயற்றிய இந்த அவசர சட்டத்தை ஒரு 4 நாட்களுக்கு முன் இயற்றியிருந்தால் இந்த இளைஞர்களின் இழப்பை தவிர்த்திருக்கலாம்.
வரலாற்றில் ஜல்லிக்;கட்டு இருக்கும்வரை இந்த இளைஞர்களின் பெயரும் இருக்கும். இது உறுதி.

No comments:

Post a Comment