Tuesday, January 31, 2017

•இரண்டாவது நாளாக தொடரும் சாகும் வரையிலான உண்ணாவிரதம்!

•இரண்டாவது நாளாக தொடரும் சாகும் வரையிலான உண்ணாவிரதம்!
காணாமல் போனவர்களின் உறவுகள் வவுனியாவில் இரண்டாவது நாளாக தமது காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடருகின்றனர்.
7 வருடங்களாக பொறுத்து பொறுத்து பார்த்தவர்கள் இனியும் பொறுக்க முடியாது என்பதால் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்கள்.
•அனைத்து தமிழ் அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்ட வேண்டும்
•காணாமல் போனோர் பிரச்சனைக்கு முடிவு காணப்பட வேண்டும்
•பயங்கரவாத தடைச்சட்டத்தை உடனே நீக்க வேண்டும்
அவர்கள் முன்வைத்துள்ள மேற்கண்ட 3 கோரிக்கைளும் நியாயமானவை. எனவே அவற்றை நிறைவேற்றுமாறு குரல் கொடுக்க வேண்டியது அனைத்து தமிழ் மக்களினதும் கடமையாகும்.
சர்வதேச மன்னிப்பு சபைகூட பயங்கரவாத தடைச்சட்டத்தை இலங்கை அரசு நீக்க வேண்டும் என்று குரல் கொடுத்துள்ளது.
ஆனால் இலங்கை அரசோ எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மிக இலகுவாக காலம் கடத்துகிறது. அதற்கு ஜ.நா வும் மேலும் தவணை வழங்குகிறது.
தமிழ் மக்களின் வாக்கில் பதவியைப் பெற்றுள்ள அரசு தமிழ் மக்களை ஏமாற்றுகிறது. அதற்கு தமிழ்தேசிய கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்குகிறது.
இனியும் இந்த அயோக்கியதனம் தொடர அனுமதிக்க முடியாது. தமிழ் மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு இதற்கு ஒரு முடிவு காண வேண்டும்.
தமிழ் மக்களுக்கு ஒரு பிரச்னை என்றால் உலகில் உள்ள தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றுபடுவார்கள் என்பதை ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பார்த்தோம்.
எனவே தமிழ் மக்கள் அனைவருக்கும் இப் பிரச்சனையை கொண்டு சேர்ப்போம். அனைவரும் இதற்காக ஒன்று திரள்வோம்.

No comments:

Post a Comment