Tuesday, January 31, 2017

•தோழர்!

•தோழர்!
சைலேந்திரபாபு மற்றும் “தோழர்” பற்றிய என் கருத்தை பதிவிடும்படி பலர் என்னிடம் கேட்கின்றனர்.
சைலேந்திரபாவுக்கு இன்று மட்டுமல்ல நான் அறிந்தவரையில் 1993 முதல் “தோழர்” என்ற வார்த்தையும் பிடிப்பதில்லை. தோழர்களையும் பிடிப்பதில்லை.
இவர் 1993ம் ஆண்டு திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளராக இருந்தபோது வேடசந்தூர் என்னும் இடத்தில் தோழர் நாகராசன் என்னும் தமிழ்நாடுவிடுதலை போராளி ஒருவரை “போலி என்கவுண்டர்”மூலம் கொன்றிருந்தார்.
அதுமட்டுமன்றி அவர் என்னையும் கொல்வதற்காக கொடைக்கானல் நீதிமன்றதத்pற்கு வந்திருந்தார். ஆனால் இவரின் நோக்கத்தை அறிந்துகொண்ட எனது தோழர்கள் நீதிமன்றதத்pல் கூறி என்னை இவருடன் அனுப்ப விடாமல் பாதுகாத்தனர்.
அதன்பின்பு இவர் அமெரிக்க தமிழ் சங்கத்தின் அழைப்பின் பேரில் 30.07.2014 யன்று அமெரிக்கா போனபோது இவரிடம் கேட்பதற்காக சில வினாக்களை எழுதி அனுப்பியிருந்தேன்.
இவருக்கு தான் ஒரு சின்ன தேவாரம் என்று நினைப்பு. எப்போதும் வால்டர் தேவாரம் போலவே தன்னை காட்டிக் கொள்ள முற்படுவார்;.
வால்டர் தேவாரம் எப்படி தன் பதவிக் காலத்தில் நக்சலைட்டுகளை ஒழிப்பதாககூறி 40 க்கு மேற்பட்ட அப்பாவி மக்களை தர்மபுரி மாவட்டத்தில் கொன்றாரோ அதேபோன்று இவரும் கொல்லுவதற்கு துடிப்பவர்.
தேவாரத்திற்கு பாடம் புகட்டினால் மற்ற இவரைப் போன்ற வாலுகள் எல்லாம் தானாக அடங்கிவிடும் என்று தோழர் தமிழரசன் கூறுவார்.
விருகம்பாக்கத்தில் ராணி என்ற பெண்ணிடம் இரவு நேரங்களில் தேவாரம் வருவதை அறிந்த தோழர் தமிழரசன் அவரை பழி வாங்குவதற்காக இரண்டு முறை காத்திருந்தார்.
ஆனால் தேவாரத்தின் அதிர்ஷ்டம் போலும் அந்த இரண்டு நாளும் வராமல் தப்பிவிட்டார்.
ஒருவேளை தோழர் தமிழரசன் நினைத்தபடி தேவாரம் பழி வாங்கப்பட்டிருந்தால் இன்று சைலேந்திரபாபு நிச்சயம் இந்த தோழர் கருத்தை கூறியிருக்கமாட்டார்.
நான் ஆரம்பத்தில் தோழர் பாலன் என்ற முகநூல் கணக்கை ஆரம்பித்தேன். அதில் 5000 நண்பர்கள் சேர்ந்துவிட்டதால் பாலன் தோழர் என்ற இன்னொரு கணக்கை ஆரம்பித்தேன்.
தற்போது அதிலும் 5000 நண்பர்கள் சேர்ந்து விட்டார்கள். தொடர்ந்து பலர் நட்பு அழைப்பு அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் நான் கடந்த 3 வருடமாக முயன்றும் சாதிக்க முடியாததை சைலேந்திரபாபு ஒரு அறிக்கை மூலம் சாதித்து விட்டார்.
ஆம். சைலேந்திரபாபுவின் தோழர் பற்றிய அறிக்கையால் இன்று பலரும் தோழர் என்ற சொல்லை பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்கள்.
மிக்க மகிழ்சியாக இருக்கிறது. இது விரைவில் “தோழர்” என்ற பெயரில் இணைய தளம் ஒன்று ஆரம்பிப்பதற்கு எனக்கு ஊக்கம் தந்துள்ளது.

No comments:

Post a Comment