Sunday, January 22, 2017

•சந்தண வீரப்பன் படத்திற்கு ஒரு நியாயம். இசைப்பிரியா படத்திற்கு இன்னொரு நியாயம் இதுதான் இந்திய நீதிமன்றத்தின் நியாயமா?

•சந்தண வீரப்பன் படத்திற்கு ஒரு நியாயம்.
இசைப்பிரியா படத்திற்கு இன்னொரு நியாயம்
இதுதான் இந்திய நீதிமன்றத்தின் நியாயமா?
கடந்த வருடம் சந்தன வீரப்பன் பற்றிய ஒரு படம் வந்தது. அப்போது வீரப்பன் மனைவி முத்துலட்சுமி படத்திற்கு தடை கோரினார்.
வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் படத்தை பார்த்துவிட்டு வழக்கை தொடரும்படி முத்துலட்சுமிக்கு ஆலோசனை கூறியது.
படத்தை பார்வையிட்ட முத்துலட்சுமி சில திருத்தங்கள் கூறினார். அது படத்தின் இயக்குனரினால் எற்கப்பட்டது.
அதனால் முத்துலட்சுமி தனது தடை கோரும் மனுவை வாபஸ் பெற்றார். படமும் தமிழமெங்கும் திரையிடப்பட்டது.
அதேபோன்று இசைப்பிரியா பற்றிய படத்தை எடுத்த இயக்குனரும் தனது படத்தை இசைப்பிரியாவின் தாயார் பார்க்க வேண்டும். அவர் கூறும் திருத்தங்களை செய்ய தயாராக இருக்கிறேன் என்று கேட்டுள்ளார்.
ஆனால் இயக்குனரின் வேண்டுகோளை ஏற்காமல் சென்னை உயர்நீதிமன்றம் படத்திற்கு தடை விதித்துள்ளது.
சந்தன வீரப்பன் பட வழக்கில் படத்தை பார்க்கும்படி முத்துலட்சுமிக்கு ஆலோசனை கூறிய சென்னை உயர்நீதிமன்றம் இசைப்பிரியா பட வழக்கில் அதனை ஏற்காமல் தடை போட்டிருப்பது ஏன்?
ஏனென்றால் இசைப்பிரியா பற்றிய படம் வெளிவரக்கூடாது என்பதில் பலம் பொருந்திய சக்திகள் பின்னணியில் செயற்படுகின்றன.
இந்த பலம் பொருந்திய சக்திகளில் ஒருவராக ஜெகத்கஸ்பார் இருப்பதாக அறிய வருகின்றது.
அவரது அமைப்பை சேர்ந்த வழக்கறிஞர் கனிமொழி என்பவரே உயர்நீதி மன்றத்தில் இவ் வழக்கிற்காக ஆஜராகியுள்ளார்.
லண்டனில் இருக்கும் இசைப்பிரியா குடும்பத்தின் பேரால் இந்த கஸ்பார் கும்பலே இப் படத்தை வெளிவராமல் தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்கின்றனர்.
இந்திய உளவுப்படையின் கைகூலியாக இந்த கஸ்பார் செயற்படுகின்றார் என்ற குற்றச்சாட்டு ஓரளவு பத்திரிகை படிப்பவர்களும் அறிந்த விடயம்.
முள்ளிவாய்க்காலில் பல புலித் தளபதிகளை வெள்ளைக் கொடியுடன் சரணடைய வைத்து கொலை செய்யப்பட்டதில் இவரது பங்கு அனைவரும் அறிந்தவிடயமே.
எனவேதான் முள்ளிவாய்கால் படுகொலைகளில் குறிப்பிடத்தக்க முக்கியமான கொலையான இசைப்பிரியாவின் கதை வெளிவருவதை அவர் தடுக்க முனைகிறார்.
முள்ளிவாய்க்கால் படுகொலை பங்குதாரர்களில் ஒருவரான கஸ்பார் இசைப்பிரியாவின் படத்தை தடை கோருவதில் எந்த அச்சரியமும் இல்லை.
ஆனால் இதை உணராது கஸ்பாருக்கு சில தமிழர் துணை போவதுதான் ஆச்சரியமாக இருக்கிறது.

No comments:

Post a Comment