Tuesday, January 31, 2017

•இன்னும் எத்தனை வருடம் இந்த மக்கள் காத்திருக்க வேண்டும் என்பதையாவது சொல்லி தொலையுங்கடா!

•இன்னும் எத்தனை வருடம் இந்த மக்கள் காத்திருக்க வேண்டும் என்பதையாவது சொல்லி தொலையுங்கடா!
காணாமல் போனவர்களின் உறவுகளின் உண்ணாவிரதம் 3வது நாளாக தொடர்கிறது.
இதுவரை அரசு எந்தவித பதிலையும் கூறாமல் அசட்டையாக இருக்கிறது.
இவர்கள் தமிழீழம் கேட்டு உண்ணாவிரதம் இருக்கவில்லை. இவர்களை பிரிவினைவாதிகள் என்று ஒதுக்குவதற்கு.
இவர்கள் ஆயுதம் ஏந்திப் போராடவில்லை. இவர்களை பயங்கரவாதிகள் என்று கூறி ஒதுக்குவதற்கு.
இவர்கள் அகிம்சை வழியில் உண்ணாவிரதம் இருக்கிறார்கள். தமது உறவுகளை கண்டு பிடித்து தருமாறு.
அதுவும் 7 வருடம் பொறுத்திருந்து எந்த ஆக்கபூர்வமான பதிலும் கிடைக்காத நிலையில்தான் வேறு வழியின்றி சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கிறார்கள்.
ஏற்கனவே அரை உயிருடன்தான் இவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அதுவும் இந்த உண்ணாவிரதத்தில் போனபின்புதான் அரசு இவர்களுக்கு பதில் சொல்லப் போகிறதா?;
இவர்கள் தமக்கு பணம் தரும்படி கேட்கவில்லை
இவர்கள் தமக்கு வேலை தரும்படி கேட்கவில்லை
இவர்கள் தமக்கு வீடு கட்டித் தரும்படி கேட்கவில்லை
இவர்கள் இனப் பிரச்சனைக்கு தீர்வு கேட்கவில்லை.
இவர்கள் கேட்பது எல்லாம் காணாமல் போன தமது உறவுகளை கண்டு பிடித்து தரும்படி
இவர்கள் கேட்பது எல்லாம் சிறையில் இருக்கும் தமது உறவுகளை விடுதலை செய்யும்படி
இவர்கள் கேட்பது எல்லாம் கொடிய பயங்கரவாத சட்டத்தை நீக்கும்படி
இவை நியாயமான கோரிக்கைகள்தானே. தாம் ஆட்சிக்கு வந்தால் இவற்றை செய்வோம் என்று வாக்குறுதி கொடுத்தவர்கள்தானே இன்றைய ஆட்சியாளர்கள்.
அப்படியிருந்தும் ஏன் இதவரை இவற்றை செய்யவில்லை? வெறும் அலட்சியத்தை தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?
ஜே.வி.பி மற்றும் முன்னிலை சோசலிசக் கட்சியை சேர்ந்த சிங்கள தலைவர்கள்கூட இந்த மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கின்றனர்.
ஆனால் இந்த மக்களின் வாக்கைப் பெற்று பதவியை அனுபவிக்கும் தமிழ்தேசிய கூட்டமைப்பு தலைவர்கள் இந்த மக்களின் குறைகளை கேட்க கூட முன்வருவதில்லை
ஒரு வருடத்தில் தீர்வு பெற்று தருவதாக சம்பந்தர் அய்யா கூறினார். அவர் கூறியபடி தீர்வு பெற்றுத் தராவிட்டாலும் பரவாயில்லை இந்த மக்களின் குறைகளையாவது தீர்த்து வைத்திருக்கலாம்.
யுத்தம் முடிந்து 7 வருடமாகிவிட்டது. இன்னும் காணாமல் போனோர் கண்டு பிடிக்கவில்லை. சிறையில் உள்ளோர் விடுதலை செய்யப்படவில்லை என்றால் என்ன அர்த்தம்?
எப்பதான் இதை எல்லாம் செய்யப் போகிறீர்கள்? இன்னும் எத்தனை வருடம் இந்த மக்கள் காத்திருக்க வேண்டும் என்பதையாவது சொல்லி தொலையுங்கடா!

No comments:

Post a Comment