Wednesday, January 11, 2017

•“இன்று ஆனையிறவில் எம்மை தாக்கும் ராணுவம் நாளை அம்பாந்தோட்டையில் சிங்கள மக்களை தாக்கும்”

•“இன்று ஆனையிறவில் எம்மை தாக்கும் ராணுவம்
நாளை அம்பாந்தோட்டையில் சிங்கள மக்களை தாக்கும்”
டெலோ தலைவர் தங்கத்துரை சொன்னது பலிக்கிறது!
1981களில் குட்டிமணி, தங்கத்துரை ஜெகன் போன்றவர்கள் ஆனையிறவு முகாமில் ராணுவத்தினரினால் சித்திரவதை செய்யப்பட்டனர்.
நீதிமன்றத்தில் மரணதண்;டனை விதிக்கப்பட்டபோது தங்கத்துரை “ இன்று ஆனையிறவில் எம்மை தாக்கும் ராணுவம் நாளை அம்பாந்தோட்டையில் சிங்கள மக்களை தாக்கும்” என்று கூறியிருந்தார்.
அவர் எதிர்வு கூறிய வரிகள் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமது விவசாய நிலம் 1000 ஏக்கர் நிலத்தை சீனாவுக்கு வழங்குவதற்கு எதிராக அம்பாந்தோட்டை சிங்களமக்கள் எதிர்ப்பு காட்டியபோதே அவர்களை ராணுவம் தாக்கியுள்ளது.
29 மக்கள் காயப்பட்டுள்னர். 26 மக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சீன ஆக்கிரமிப்பிற்கு எதிராக எந்தவொரு மக்கள் போராடினாலும் ராணுவம் கொண்டு அடக்கப்படும் என்பதையே அரசு காட்டியுள்ளது.
அடுத்து இந்தியாவுடன் “எட்கா” ஒப்பந்தம் போடுவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கு எதிராகவும் சிங்கள மக்கள் கிளர்ந்தெழுந்தால் ராணுவம் கொண்டு அடக்கப்படும் என்பதையே இது காட்டுகிறது.
தமது வரிப்பணத்தில் கட்டப்பட்ட ராணுவம் தமக்கு எதிராக பயன்படுத்தப்படும் என்பதை சிங்கள மக்கள் எதிர் பார்த்திருக்மாட்டார்கள்.
ஆனால் இதே ராணுவம்தான் 1989ல் 60 அயிரம் சிங்கள இளைஞர்களை கொன்றது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
இதே ராணுவம்தான் 1971ல் கதிர்காமத்தில் மன்னம்பேரி என்ற சிங்கள யுவதியை பாலியல் வல்லுறவு செய்து நிர்வாணமாக வீதியில் இழுத்து சென்று கொன்றது.
இதே ராணுவம்தான் 2012ல் நீர்கொழும்பில் இந்திய கம்பனிக்கு எதிராக போராடிய சிங்கள மக்களில் இருவரை சுட்டுக் கொன்றது.
ராணுவம் அரசின் ஏவல் நாய் என்பதை மக்கள் உணர வேண்டும். இது தமிழ் சிங்கள மக்கள் அனைவருக்கும் எதிராக பயன்படுத்தப்படுகிறது.
யுத்தத்திற்கு பின்பும் வரவு செலவு திட்டத்தில் 32வீதம் ராணுவத்திற்கு தொடர்ந்தும் ஒதுக்கப்படுவது ஏன் என்பதை இனியாவது சிங்கள மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment