Wednesday, January 11, 2017

•முழந்தாளிட்டு வாழ்வதனைவிட எழுந்து நின்று மரணிப்பது மேல்!

•முழந்தாளிட்டு வாழ்வதனைவிட
எழுந்து நின்று மரணிப்பது மேல்!
நல்லிணக்கம் என்பது பரஸ்பரம் விட்டுக் கொடுப்பது
ஒருவர் மட்டும் விட்டுக்கொடுப்பது நல்லிணக்கம் அல்ல
மாறாக அது அடிமைத்தனம் என்றே அழைக்கப்படும்
நல்லிணக்கம் என்று சொல்லிக்கொண்டு அனைத்தையும் விட்டுக்கொடுத்தோம்.
ஆனால் “நல்லாட்சி அரசு” தமிழருக்கு எதையும் தர முன்வரவில்லை.
யுத்தம் முடிந்து 7 ஆண்டுகள் கழிந்துவிட்டன
தமிழர் ஆதரவில் ஆட்சிபீடம் ஏறியவர்கள்
இன்னும் அரசியல் கைதிகளை விடுதலை செய்யவில்லை
காணாமல் போனோரை கண்டு பிடிக்கவில்லை
இடம்பெயர்ந்தோரை மீள் குடியேற்றம் செய்யவில்லை
இதைக்கூட செய்யாதவர்கள் தீர்வு தருவார்கள் என எப்படி நம்புவது?
போராடாத எந்த இனமும் விடுதலை பெற்றதில்லை
தமிழ் மக்களும் போராடாமல் இருக்க முடியாது
சம்பந்தர் அய்யா அவர்களே!
முடிந்தால் தமிழ் மக்களின் போராட்டத்திற்கு தலைமை தாங்குங்கள்
இல்லையேல் பதவியை ராஜினாமா செய்து மற்றவர்களுக்கு வழி விடுங்கள்
இனியும் உங்கள் பதவி நலனுக்காக தமிழ் மக்கள் அடிமையாக கிடக்க முடியாது
இந்த வருடத்தில் தீர்வு வரும் என்று ஒவ்வொரு வருடமும் கூறுவீர்கள்.
ஒவ்வொரு வருடமும் தமிழ் மக்களை இவ்வாறு ஏமாற்றுவீர்கள்.
காலம் பூராவும் நீங்கள் பதவி சுகம் அனுபவிக்க தமிழ் மக்களை ஏமாற்றுவீர்கள்.
தமிழர் வரலாற்றில் மிகப் “பெரிய பொய்யர்” என்று பெயர் எடுத்துள்ளீர்கள்.
யார் இறந்தாலும் இன்னும் கொஞ்ச காலம் வாழ்ந்திருக்கலாம் என அனுதாபம் கொள்வது தமிழர் பண்பு.
ஆனால் வாழும்போதே இது இன்னும் சாகவில்லையா என மக்கள் அங்கலாய்ப்பது ஒரு சிலருக்கே.
அந்த சிலரில் ஒருவராக நீங்கள் இப்போது இருக்கிறீர்கள்.
கடந்த வாரம் வவுனியாவில் தமிழ் பெண்கள் உங்கள் உருவப்படத்தை எரித்து செத்து தொலை என்று திட்டியதை தொலைக்காட்சியில் பார்த்திருப்பீர்கள்.
மானஸ்தனாக இருந்தால் ஓட்டை சிறட்டையில் தண்ணி விட்டு தற்கொலை செய் என்று ஊரில் கூறுவார்கள்.
நீங்கள் அப்படியெல்லாம் செய்யும் அளவிற்கு மானஸ்தன் இல்லை என்று தெரியும்.
அனால் இத்தனைக்கும் பிறகும் பதவியை ராஜினாமா செய்யாமல் ஒட்டிக் கொண்டிருக்கிறீர்களே,
உங்களுக்கு கொஞ்சம்கூட சூடு, சொரணை, வெட்கம், மானம் எதுவுமே இல்லையா?

No comments:

Post a Comment