Wednesday, January 11, 2017

•தமிழ்நாட்டில் வந்தால் ரத்தம் கேரளாவில் வந்தால் தக்காழி சட்னியா?

•தமிழ்நாட்டில் வந்தால் ரத்தம்
கேரளாவில் வந்தால் தக்காழி சட்னியா?
நல்லாய் இருக்கு சிபிஎம் கம்யுனிஸ்டு நியாயம்!
மேடவாக்கத்தில் பண நெருக்கடிக்கு எதிராக போராட்டம் நடத்திய சிபிஎம் கம்யுனிஸ்ட் கட்சியை சேர்ந்த இளைஞரை தமிழக காவல்துறை மோசமாக தாக்கியுள்ளது.
தமிழ்நாடு பொலிசாரின் அராஜகம் வன்மையான கண்டனத்திற்குரியது.
ஆனால் தமிழ்நாடு பொலிசாரின் இந்த அராஜகத்தை கண்டிக்க சிபிஎம் கட்சிக்கு தகுதி இருக்கா?
கடந்த மாதம் கேரளாவில் தமிழ்நாட்டை சேர்ந்த பெண் வழக்கறிஞர் ஒருவர் இதே சிபிஎம் கட்சி அரசின் காவல்துறையினாலேதானே சுட்டுக் கொல்லப்பட்டார்.
சுட்டுக்கொன்றது மட்டுமல்லாமல் அவரது உடலைக்கூட உறவினர்களிடம் வழங்காமல் இருந்தது இதே சிபிஎம் கட்சி அரசுதானே.
அதுமட்டுமா, இந்த போலி என்கவுண்டர் கொலைக்கு எதிராக குரல் கொடுத்தமைக்காக மனிதவுரிமை ஆர்வலர் ஒருவரை கைது செய்து சிறையில் அடைத்து வைத்திருப்பதும் இதே கட்சியின் அரசுதானே.
அன்று மேற்கு வங்கத்திலும் இன்று கேரளாவிலும் இந்த கட்சியின் அரசு செய்யும் அராஜகத்தைத்தானே தமிழக அரசும் இவர்களுக்கு செய்துள்ளது.
தமிழகத்தில் தங்களுக்கு நடந்தவுடன் மக்களை கூட்டி ஆர்ப்பாட்டம் செய்து தமிழக அரசின் அராஜகத்தை ஒழிப்போம் என கோசம் போட இவர்களுக்கு என்ன தகுதி இருக்கு?

No comments:

Post a Comment